ரஜினிகாந்த் அரசியிலிலிருந்து பின்வாங்கியது பா.ஜ.கவின் தோல்வி - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ரஜினிகாந்த் அரசியிலிலிருந்து பின்வாங்கியது பா.ஜ.கவின் தோல்வி - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கே.எஸ். அழகிரி

அரசியல் கட்சி தொடங்கமாட்டேன் எனும் ரஜினிகாந்த்தின் முடிவு பா.ஜ.கவின் தோல்வி என்று காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா என்பது குறித்து நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன். அதற்கான தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். அதனையடுத்து, அவர் கட்சி தொடங்குவது உறுதியானது. இந்தநிலையில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக பங்கேற்றிருந்தபோது, உடன் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால், ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சைப் பெற்றார்.

  இந்தநிலையில், நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

  இருப்பினும், ரஜினிகாந்தின் அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். ரஜினிகாந்த்தின் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘ரஜினிகாந்த் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஆன்மீகவாதிகள் தேர்தல் அரசியலை விரும்பமாட்டார்கள் எனவும்,
  ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியது பாஜக தோல்வி எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘வேளாண் சட்ட விவகாரத்தில் மோடி சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும், சர்வாதிகாரிகள் யாரும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க மாட்டார்கள் என தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: