நவம்பர் 30-ம் தேதி மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

நவம்பர் 30-ம் தேதி மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

 • Last Updated :
 • Share this:
  ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

  அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார். எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.

  இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

  இதில், நேரடியாகவோ, காணொலி மூலமாகவோ ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அரசியல் கட்சி குறித்த உறுதியான முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.





  அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
  Published by:Vijay R
  First published: