• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை அறிக்கை

ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை அறிக்கை

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று (அக். 28) இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் தங்கியிருந்து பரிசோதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், காவேரி மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் நேற்று மயக்கம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நிபுணர் குழுவால் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டார். இதன் பின் ஆலோசனை வழங்கப்பட்டது.

    அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை காரணமாக திசுக்கள் சிதைவு ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: