அந்தக் கருத்தை கொண்டுபோய் சேர்த்த அனைவருக்கும் நன்றி - நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

Rajinikanth |

அந்தக் கருத்தை கொண்டுபோய் சேர்த்த அனைவருக்கும் நன்றி - நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்
நடிகர் ரஜினிகாந்த்
  • Share this:
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது அரசியல் பயணம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 96-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. 1995 முதல் நான் அரசியலுக்கு வர உள்ளதாக ஒருபோதும் கூறியதில்லை.

முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன். மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன். முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல. கட்சி வேற.. ஆட்சி வேற என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்கணும் என பேசியிருந்தார்.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 🙏🏻 என பதிவிட்டுள்ளார்.

 
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading