ரஜினியை அப்போதுதான் முதல்முறையாக பார்த்தேன் - எம்ஜிஆர் இறந்தபோது நடந்ததுப் பற்றி சசிகலா விளக்கம்!

ரஜினி- சசிகலா

எம்ஜிஆர் இறந்துபோன தகவலை  நான்தான் தொலைபேசியில் ஜெயலலிதாவிடம் கூறினேன். அதை கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்து மவுனமானார்

 • Share this:
  முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மரணத்தின் போதுதான் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த்தை பார்த்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,  பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி வந்த பின் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தேர்தல் முடிவுக்கு பின்னர் அவரது அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. அதிமுகவை கைப்பற்றியே தீருவோம் என்று தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோ ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், தந்தி தொலைக்காட்சிக்கு சசிகலா பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில்,  மருத்துவராக வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகவும் சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்றதால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

  மேலும், ’எம்ஜிஆர் இறந்துபோன தகவலை  நான்தான் தொலைபேசியில் ஜெயலலிதாவிடம் கூறினேன். அதை கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்து மவுனமானார்.  எம்.ஜி.ஆரின் உடல் ராமாவரம் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. நான், தினகரன், ஜெயலலிதா மூவரும் அவரது உடலைப் பார்ப்பதற்கு ராமாவரம் தோட்டத்துக்கு சென்றோம். அப்போது எங்களது காரை உள்ளே அனுமதிக்கவில்லை. 15 நிமிடங்களுக்கு மேலே நாங்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டிருந்தோம். அதனால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல தயாரானோம். அப்போதுதான், கதவைத் திறந்தனர்’ என்றும் சசிகலா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: அந்த வீடியோவை மட்டும் கொடுத்திடுங்க... திமுக பேரம் பேசியதாக சசிகலா தகவல்...


  எம்.ஜி.ஆர் இல்லத்துக்கு சென்றபோது முன்னாள் அமைச்சர் ராஜராம், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் உள்ளே இருந்ததாகவும், எங்களை உள்ளே விடுமாறு நடிகர்  ரஜினிகாந்த் கூறியதாகவும் குறிப்பிட்ட சசிகலா, முதன்முறையாக அப்போதுதான் ரஜினிகாந்த்தை பார்த்தாகவும் கூறியுள்ளார்.
  Published by:Murugesh M
  First published: