• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை..!

கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை..!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்கான திட்டமிடல் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

  • Share this:
    அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், புதிய கட்சியை எப்போது அறிவிப்பது, அதற்கான மாநாட்டை எங்கே நடத்துவது உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக, 2017-ம் ஆண்டு டிசம்பரில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அரசியல் கட்சியை தொடங்கி 2021-ல் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவது என்று அறிவித்தார். இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: