நாளை மறுநாள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். சென்னை வந்த கையோடு, ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 • Share this:
  ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வரும் திங்கள் கிழமை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  அண்மையில் அண்ணாத்த திரைப்பட படப்படிப்புகளை முடித்த ரஜினிகாந்த், சிறுநீரக பரிசோதனை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அங்கு புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டது.

  இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். சென்னை வந்த கையோடு, ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  முன்னதாக, உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அப்படி, அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மக்கள் மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பாக பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

  Also read: ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்; சசிகலாவின் அதிரடி பிளான்!!

  மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: