ரஜினி குடியுரிமை சட்டம் குறித்து புரிதலோடு தான் பேசி வருகிறார் - எச்.ராஜா

திமுகவில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் மத்தியில் திமுகவில் இந்துக்களுக்கு இடமில்லை என்ற எண்ணம் உருவாகி உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

ரஜினி குடியுரிமை சட்டம் குறித்து புரிதலோடு தான் பேசி வருகிறார் - எச்.ராஜா
திமுகவில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் மத்தியில் திமுகவில் இந்துக்களுக்கு இடமில்லை என்ற எண்ணம் உருவாகி உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
  • Share this:
ஸ்டாலின் முகமது அலிஜின்னாவாக மாறியுள்ளார். இன்று வரை ரஜினி குடியுரிமை சட்டம் குறித்து புரிதலோடு தான் பேசி வருகிறார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் பொருந்தும்.

திமுக கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்து விரோதத்தில் இருந்து தேச விரோதமாக மாறிக்கொண்டு உள்ளது. முகமது அலி ஜின்னாவாக இன்றைக்கு மு.க ஸ்டாலின் மாறியுள்ளார். அதனால்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவதற்காக முஸ்லிம் சமுதாயத்தை தூண்டி விடுகின்றார்.


Also see...சபரிமலை தீர்ப்புக்குப் பின்னரே CAA வழக்குகள் விசாரிக்கப்படும் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே

திமுகவில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் மத்தியில் திமுகவில் இந்துக்களுக்கு இடமில்லை என்ற எண்ணம் உருவாகி உள்ளது. இதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் திமுக, முஸ்லீம் லீக் ஆக மாறிவிடும்.

சரியான ஆதாரம் இல்லாமல் தமிழகத்தில் இருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து இன்று வரை ரஜினிகாந்த் புரிதலோடு தான் பேசி வருகிறார்Also see...கோழி இறைச்சி, முட்டைகளால் கொரோனா வைரஸ் பரவாது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் அறநிலையத்துறையும் தொல்லியல் துறையும் உள்ளது. இதில் கடவுள் இல்லாத கோயில்கள் யாரிடம் இருந்தால் என்ன? சாமி இல்லை என்று கூறும் வீரமணிக்கு என்ன பேச்சு என கூறினார்.
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading