”அமித்ஷா யார் என்று மக்களுக்கு இப்போது தெரிந்துள்ளது” புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு!

Rajinikanth Speech about Modi and Amitshah | "அமித்ஷாவும், வெங்கையாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன், அர்ஜுனன் என்பது அவர்கள் இருவருக்கு தான் தெரியும்"

News18 Tamil
Updated: August 11, 2019, 12:02 PM IST
”அமித்ஷா யார் என்று மக்களுக்கு இப்போது தெரிந்துள்ளது” புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு!
ரஜினிகாந்த்
News18 Tamil
Updated: August 11, 2019, 12:02 PM IST
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் போல இருக்கின்றனர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.


நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் ரஜினி பேசியதாவது, “2 வருடங்கள் கடந்த துணை குடியரசு தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்ச்சி சென்னையில் நடப்பது நமக்கு பெருமை.அவர் முழுமையான ஆன்மீகவாதி ஆனால் தவறுதலாக அரசியலில் ஈடுப்பட்டுவிட்டார் என்று கருதுகிறேன்.

அவர் எப்போதும் ஏழை மக்கள் பற்றியே நினைத்து கொண்டிருப்பார். 25 ஆண்டுகளாக வெங்கையா நாயுடுவை எனக்கு தெரியும்.

Loading...

அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கடவுள் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

அமித்ஷாவும், வெங்கையாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன், அர்ஜுனன் என்பது அவர்கள் இருவருக்கு தான் தெரியும்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து சிறப்பான நடவடிக்கையை அமித்ஷா மேற்கொண்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் அவருடைய பேச்சு மிக அருமையாக இருந்தது. அமித்ஷா யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது." என்று பேசினார்.

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...