Home » News » Tamil-nadu » RAJINIKANTH SPEAKS WITH DISTRICT SECRETARIES OF RAJINI MAKKAL MANDRAM MG

Rajinikanth: ’மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை’.. ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்..

மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகள் தனக்கு திருப்தியாக இல்லை என்று ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth: ’மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை’.. ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்..
நடிகர் ரஜினிகாந்த்
  • News18 Tamil
  • Last Updated: November 30, 2020, 11:26 AM IST
  • Share this:
ராகவேந்திர மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திவரும் ரஜினிகாந்த், கட்சி தொடங்கலாமா எனக் கேட்டதாகவும், கட்சி தொடங்கினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என செயலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகள் தனக்கு திருப்தியாக இல்லை என்று ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட இருக்கும் நிலையில் நேற்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார்.


மேலும் படிக்க : Rajinikanth | Rajini Makkal Mandram | மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. நாளை ரசிகர்களுடன் சந்திப்பு எனத் தகவல்..

எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் இருந்து இன்று சென்னைக்கு வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: November 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading