• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Rajinikanth Fans Reaction | ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தவறினால், இனி நோட்டாவுக்கு வாக்களிபோம்: ரசிகர்கள் ஆவேசம் (வீடியோ)

Rajinikanth Fans Reaction | ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தவறினால், இனி நோட்டாவுக்கு வாக்களிபோம்: ரசிகர்கள் ஆவேசம் (வீடியோ)

Youtube Video

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கியிருப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அவரது ரசிகர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.

  • Share this:
    அரசியல் கட்சி தொடங்கபோவதில்லை எனக் கூறி தமிழகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் துரோகம் இழைத்துவிட்டதாக அவர்களது ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரஜினிகாந்த் வாரும் வாரம் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பார் என்றும், உடல்நலம் கருதி அரசியலில் இருந்து விலகியிருக்கலாம் என்றும் பொதுமக்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

    அதேநேரம், ரஜினி காந்த் உடலநலம் கருதி சுயமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அவரது உடல் நலமே தங்களுக்கு முக்கியம் என்றும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தவறினால், இனி நோட்டாவுக்கு வாக்களிபோம் என ஒரு தரப்பு ரசிகர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.


    இதனிடையே, ரஜினியின் அறிவிப்பை கேட்டு கோபமடைந்த திருச்சியை சேர்ந்த அவரது தீவிர ரசிகரான பரமசிவம், ரஜினியின் பேனரை எரித்ததுடன், கடுஞ்சொற்களால் திட்டிதீர்த்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    மேலும் படிக்க...கருணாநிதி, ஜெயலலிதா உருவம் கொண்ட ஐம்பொன் மோதிரங்கள்.. ஆர்வத்துடன் வாங்கி செல்லும் கட்சி தொண்டர்கள்..



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: