• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினி பெயரில் தேர்தல் ஆணையத்தில் "மக்கள் சேவை கட்சி" பதிவு....

ரஜினி பெயரில் தேர்தல் ஆணையத்தில் "மக்கள் சேவை கட்சி" பதிவு....

 நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் பெயரில் மக்கள் சேவை கட்சி என்ற கட்சி பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அண்மையில் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ரஜினியின் கட்சி பெயர் தேர்தல் ஆணையத்தில் விரைவில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பெயரில் மக்கள் சேவை கட்சி எனும் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரஜினி பெயரில் கட்சி தொடங்க விண்ணப்பித்தவர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. பாபா முத்திரையை சின்னமாக ஒதுக்க விண்ணப்பதாரர் கேட்டிருந்ததாகவும், ஆனால், தேர்தல் ஆணையம் அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகின்றது.

    மேலும் படிக்க...கட்சித் தொடங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம்.. காட்டமாக விமர்சிக்கும் அரசியல் பிரமுகர்கள்

    பாபா முத்திரை சின்னம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தோடு ஒத்திருப்பதால் அதனை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தாக கூறப்படுகிறது. தற்போது ஒதுக்கப்பட்ட ஆட்டோ சின்னத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது. இது ரஜினிகாந்தின் அதிகாரபூர்வ கட்சியா என்ற விவரம் வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: