தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தது - கோவையில் ரஜினி படத்துடன் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தது என்று எம்.ஜி.ஆர், ரஜினி படங்களுடன் ரஜினி ரசிகர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அ.தி.மு.க கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. யாருமே எதிர்பாராத வகையில் பா.ஜ.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை வீழ்த்தி வானதி ஸ்ரீனிவாசனும், மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசனை வீழ்த்தி பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதியும் வெற்றி பெற்றனர்.

  வானதிஸ்ரீனிவாசனிடம் கமல்ஹாசன் தோல்வியடைந்தது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில், கோவையில் தாமரை மலர்ந்தது என்று ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போஸ்டரில், ‘கோவை மாவட்டம் கோட்டையானது. தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தது’ என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்ட அந்தப் போஸ்டரில் ஒருபுறம் எம்.ஜி.ஆரும், மறுபுறம் ரஜினியின் படமும் இடம்பெற்றுள்ளது.

  போஸ்டரின் மையத்தில் இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினிகாந்த் உறுதியாக அறிவித்துவிட்ட பிறகும் ரஜினியை பா.ஜ.கவுடன் இணைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: