எப்போது புதிய கட்சி தொடங்குவார் ரஜினிகாந்த்? கராத்தே தியாகராஜன் விளக்கம்

ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை நவம்பர் மாதத்தில் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்

எப்போது புதிய கட்சி தொடங்குவார் ரஜினிகாந்த்? கராத்தே தியாகராஜன் விளக்கம்
ரஜினிகாந்த் உடன் கராத்தே தியாகராஜன்
  • Share this:
காமராஜரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு கராத்தே தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காமராஜர் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் கே.எஸ்.அழகிரியை இன்று காணவில்லை. ஓடி ஒளிந்துவிட்டார். விரைவில் அவரை மாற்றப்போவதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், ரஜினி ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்ததாக கூறிய அவர், கொரோனா காரணமாக அது தள்ளிப்போவதாகவும், நவம்பர் மாதத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார் எனவும் தெரிவித்தார்.


மேலும் அவர் பேசுகையில், "நாவலரை அசிங்கப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அவர் அறிவாலயத்தில் படம் திறப்பது எந்த விதத்தில் நியாயம்? முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டும் மு.க.ஸ்டாலின், பேங்காங்க் போனது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீளமுடியும்.

மு.க.ஸ்டாலின் முதலில் சரியாக இருந்துவிட்டு தமிழக அரசை சுட்டிக்காட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளுக்கு நிர்வாகிகள் தான் காரணம். கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராக வருவார் என்ற தகவல் வந்துள்ளது” என்றார் கராத்தே தியாகராஜன்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading