ரஜினி ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு கொடுக்கனும் - அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத் - ரஜினி

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

 • Share this:
  நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 12-ம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியானதுமே கோடம்பாக்கம் பரபரப்பானது. அரசியலுக்கு வரமுடியவில்லை என்று சொன்ன ரஜினி நிர்வாகிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது அவரது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியது.கோடம்பாக்கத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

  இதனையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்பட முடிவு செய்துள்ளதாக” அதில் தெரிவிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் பரவாயில்லை அவர் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளரிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் ஆன்மிக அரசியலையும், தேசிய அரசியலையும் ஆதரிக்க வேண்டும். ” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: