திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.

திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்
  • Share this:
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக்கி தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவித்து வந்த ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. போர் வரும் போது வருவேன் என்று அதற்கு பதில் சொன்ன ரஜினிகாந்தை கொரோனா அச்சுறுத்தல் புரட்டிப்போட்டுள்ளது. வயது முதிர்வு, தனக்கு செய்யப்பட்டிருக்கும் சிறுநீரக அறுவை சிகிச்சை, கொரோனா பெருந்தொற்று காலம் இவை அனைத்தையும் காரணம் காட்டி அரசியல் பிரவேசம் வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக ரஜினிகாந்தின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வைரலானது.

இதற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த், “அந்த அறிக்கை என்னுடையது அல்ல. அதில் வெளிவந்திருக்கும் எனது உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ரஜினிகாந்த் அரசியல் களத்திலிருந்து விலகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது ஷபிக் மற்றும் மன்றத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மன்றத்தில் இருந்து விலகி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மேலும் படிக்க: ரஜினியின் அரசியல் வருகை பற்றி தேர்தல் நேரத்தில் தெரியும்- தியாகராஜன்

இதுகுறித்து கட்சியில் இணைந்தவர்கள் கூறுகையில், “மக்களுக்காக செயல்படும் நோக்கில் ரஜனி மக்கள் மன்றத்தில் இணைந்தோம். ஆனால் தற்போது அது செயல்படாத இயக்கமாக உள்ளது. ஆனால் இளைஞர்களுக்காக நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர் .தொடர்ந்து மக்கள் பிரச்சனை எதுவானாலும் முகநூல் உள்ளிட்ட இணைய தளம் மூலம் வாயிலாகவும் கருத்து தெரிவிக்கின்றனர் . மக்களுக்காக செயல்படும் இயக்கமாக திமுக உள்ளது. எனவே திமுகவில் இணைந்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading