• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • Rajinikanth Treatment | ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கூறியதற்கு அவரது உடல்நிலைதான் காரணமா? இதுவரை அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் என்னென்ன? (வீடியோ)

Rajinikanth Treatment | ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கூறியதற்கு அவரது உடல்நிலைதான் காரணமா? இதுவரை அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் என்னென்ன? (வீடியோ)

Youtube Video

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கூறியதற்கு அவரது உடல்நிலைதான் காரணமாக சொல்லி இருக்கும் நிலையில், அவர் இதுவரை எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் என்னென்ன?

 • Share this:
  கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் கால் பதித்த ரஜினிகாந்த், இன்றும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். திரைப்படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது, நடனம் ஆடுவது என எப்போதும் போல ரஜினி உற்சாகமாக தோன்றினாலும் சிங்கப்பூரில் சிகிச்சை செய்து திரும்பியதில் இருந்து ரஜினியின் உடல்நிலை குறித்த கேள்விகள் எழுந்துகொண்டேதான் உள்ளன.

  2011-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகவிருந்த ராணா படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளில் ரஜினி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். அதன்பின் மூச்சுத் திணறல், நுரையீரல் நீர்கோர்ப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதால் நவீன சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதுடன் ஒரு மாத காலம் வரை சிங்கப்பூரிலேயே தங்கி ஓய்வெடுத்து சென்னை திரும்பினார்.

  சென்னை திரும்பிய வேகத்தில் கோச்சடையான், லிங்கா, கபாலி என அடுத்தடுத்து படங்களில் நடித்ததால் ரஜினி உடல்நிலை குறித்த எந்த சந்தேகமும் எழாமல் அவர் பூரண குணமடைந்துவிட்டதாக அவருடைய ரசிகர்கள் கொண்டாடினர். அதேசமயம் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது அமெரிக்கா சென்று சில வாரங்கள் அங்கு தங்கி ஓய்வெடுப்பதையும் ரஜினி வழக்கமாக கொண்டிருந்தார்.

  இந்த நிலையில்தான் ரஜினி தன்னுடைய ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் 2016-ம் ஆண்டு மே மாதம் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக ரஜினி கூறியதுபோல் இடம்பெற்றிருந்தது. பின்னர் இந்த கடிதத்தை தான் எழுதவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி, அதில் கூறப்பட்டிருந்த தனது உடல்நிலை குறித்த விவரங்கள் மட்டும் உண்மை என ஆமோதித்திருந்தார்.

  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் அதனால் மக்களைச் சந்தித்து அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் ரஜினி அதில் குறிப்பிட்டிருந்தார்.

  மேலும் படிக்க...ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம் : அர்ஜுன் சம்பத் 

  கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கியிருந்த ரஜினி, அங்கு சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி மூலிகை குளியல், 5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி, நீச்சல், மூலிகை வேது பிடித்தல் எனப் பல சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார்.

   
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: