Home /News /tamil-nadu /

ரஜினிகாந்த்தின் 72-வது பிறந்தநாள் - மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்த ரசிகர்கள்

ரஜினிகாந்த்தின் 72-வது பிறந்தநாள் - மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்த ரசிகர்கள்

ரஜினிகாந்த் ரசிகர்கள்

ரஜினிகாந்த் ரசிகர்கள்

மயிலாடுதுறையில் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தநிலையில், மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர்கள் காலை முதல் ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகின்றனர்.

காலை 7 மணிக்கு ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவுகளை வழங்கினார். பின்னர் அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மெத்தைகளை வழங்கினர்.

தொடர்ந்து, மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய ரஜினி ரசிகர்கள், பின்னர் கோவில் வளாகத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு, ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தித்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Rajinikanth, Rajinikanth Fans

அடுத்த செய்தி