‘அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி சொன்னால் அவரது ரசிகர்களே இனி நம்பமாட்டார்கள்' - கோலாகல ஸ்ரீநிவாஸ் விமர்சனம்

கோலாகல ஸ்ரீநிவாஸ், ரஜினி

சரிந்திருக்கும் தனது செல்வாக்கை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் விமர்சித்துள்ளார்.

 • Share this:
  அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி சொன்னால் அவரது ரசிகர்களே இனி நம்பமாட்டார்கள் என்றும், சரிந்திருக்கும் தனது செல்வாக்கை சீர் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளதாகவும் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் விமர்சித்துள்ளார்.

  எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்பதால், மக்கள் மன்றத்தை கலைப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உடல்நலனைக் கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த பின்னர், முதல்முறையாக தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். எதிர்கால திட்டங்கள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

  அதில் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பிறகு மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்பதை ரசிகர்களுக்கு விளக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக்கி, பல பதவிகளையும், சார்பு அணிகளையும் உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். காலச் சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை, வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  அதனால் தனது மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். அத்துடன் சார்பு அணிகள் ஏதுமின்றி, மக்கள் மன்றம் இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுளளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: