அரசியலுக்கு இனி வரவே மாட்டேன் - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

ரஜினிகாந்த்

கால சுழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை.

 • Share this:
  வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்பட முடிவு செய்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இதனால் காலை முதலே ரசிகர்கள் கோடம்பாக்கத்திற்கு படையெடுத்தனர். ரஜினி கோடம்பாக்கத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்பட முடிவு செய்துள்ளதாக  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  Also Read: அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை மித்ரா - மத்திய அரசின் வரி தள்ளுபடிக்காக காத்திருப்பு

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

  Also Read: 6 வருஷம் இல்ல 9 வருஷமாம்.. தமிழக அரசுப்பேருந்துகளின் ஆயுட்காலம் உயர்வு - அரசாணை வெளியீடு

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கால சுழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் , இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: