கொள்கை... மக்களின் மனநிலை... மாநாடு எங்கே...? நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் பேசியது இதுதான்..!

Rajinikanth | "கட்சி அறிவிப்பு எந்த விதமான கொள்கைகள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது"

கொள்கை... மக்களின் மனநிலை... மாநாடு எங்கே...? நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் பேசியது இதுதான்..!
Rajinikanth | "கட்சி அறிவிப்பு எந்த விதமான கொள்கைகள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது"
  • News18
  • Last Updated: March 5, 2020, 5:09 PM IST
  • Share this:
மக்களின் மனநிலை என்ன?, மாவட்டங்களில் பலம் என்ன? என்று மாவட்ட செயலாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி பெயர் தொடர்பான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் பேரவை தேர்தலுக்குள் கட்சியை தொடங்கி, அதன் பெயரை ரஜினி அறிவிப்பார் என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது, ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் வரை உறுப்பினர்கள் சேர்ந்தார்களா?, தங்களது ஊர்களில் மன்றத்தின் பணிகள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பற்றி மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.


இதேபோல் கட்சியின் பெயரை அறிவிப்பது தொடர்பான மாநாட்டை எங்கு நடத்துவது என்பது பற்றியும் அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து போட்டியிடலமா என்பது குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசியல் சூழலையும் அவர் நிர்வாகிகளிடம் கேட்டறிந்துள்ளார். சில மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார்.

பின்னர், ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தின் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கட்சி தொடங்குவதைப் பற்றி ஓராண்டுகளுக்குப் பின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினேன். மக்கள் மன்ற நிர்வாகிகள் உடனான சந்திப்பு திருப்தி அளித்தது.

தனிப்பட்ட ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை; ஏமாற்றம் இருந்தது. அதனை இப்போது கூற முடியாது. நேரம் வரும் போது கூறுகிறேன்” என்று அவர் கூறினார்.இதற்கிடையே, ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.

அப்போது, “தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி விசாரித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன சூழல் இருக்கிறது.மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதற்கு முன் என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்னென்ன திட்டங்கள் வகுக்க வேண்டும் என்று பெரும்பாலான கருத்துகளை ரஜினிகாந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் விவாதித்தார். எங்களுடைய கருத்தையும் ரஜினி கேட்டுக் கொண்டார். நிறைய அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர் வழங்கிய அறிவுரைகள் எங்களுக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொண்டுவந்திருக்கிறது.

நிறைய விஷயங்கள் குறித்துப் பேசினார். ஏற்கனவே சொன்னதுபோல் மாவட்ட செயலாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்கள் மன்றம் சார்ந்த விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் மக்களின் மனநிலை என்ன?, மாவட்டங்களில் பலம் என்ன? என்று எல்லா விஷயங்களையும் கேட்டுக்கொண்டார். எல்லாக் கருத்துக்களையும் தெரிவித்து இருக்கிறோம்

கட்சி அறிவிப்பு எந்த விதமான கொள்கைகள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ரஜினிகாந்த் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்” என்று கூறினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also See...
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading