தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை: ஹோலோகிராபிக் 3D முறையில் பிரச்சாரம் செய்ய திட்டம்?

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுவெளிக்குச் செல்வதில் சிரமம் உள்ளநிலையில் ஹோலோ கிராபிக் 3டி முறையில் பிரச்சாரம் செய்வது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை: ஹோலோகிராபிக் 3D முறையில் பிரச்சாரம் செய்ய திட்டம்?
நடிகர் ரஜினிகாந்த்
  • Share this:
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று 2017-ம் ஆண்டு ரஜினிகாந்த் தெரிவித்தார். இருப்பினும், இதுவரையில் அவர் கட்சி தொடங்கவில்லை. இந்த ஆண்டு கட்சி தொடங்கலாம் என்றிருந்தநிலையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கட்சி தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், அவரது உடல்நிலையின் காரணமாக அவர் பொதுவெளிக்கு செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதனால், அவர் கட்சி தொடங்கமாட்டார் என்று செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்தநிலையில், ரஜினிகாந்த் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் ரஜினிகாந்தே நேரில் சென்று பிரச்சாரம் நடத்தும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பதை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினியிடம் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் மக்களிடம் நேரில் பேச முடியும். அதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஜினிகாந்த் பிரச்சாரத்தை மேற்கொண்டால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 2012ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிக இடங்களுக்கு செல்ல முடியாத காரணத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹோலோ கிராபிக் 3D என்ற முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.


அதிக மக்களை சந்திக்க வேண்டும் என்ற உறுதியுடன் நரேந்திர மோடி செய்த அந்த பிரச்சாரம் தற்பொழுது கொரோனோ தொற்று இருக்கக்கூடிய இந்த தருணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பயன்படும் வகையில் மாறி உள்ளது. குறிப்பாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சூழலைத் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் ஹோலோ கிராபிக் 3டி முறையில் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் ரஜினிகாந்தால் பேச முடியும்.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவக்குமார் ஒரே நேரத்தில் 12,000 எல்சிடி திரைகள் மூலம் நடத்திய நிகழ்ச்சி சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் சேர்த்து 50 லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். அதைவிட அதிக மக்களை சென்றடையும் வகையில் புதிய முறையை தமிழகத்தில் ரஜினி கையாள உள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.ஒரு கண்டெய்னர் லாரி மூலம் இரண்டு மணி நேரத்தில் ஹோலோ கிராபிக் 3டி முறையை ஏற்பாடு செய்ய முடியும். இந்த ஏற்பாடு செய்த உடன் ரஜினிகாந்த் வீட்டில் இருந்தபடி பொதுமக்களுடன் நேரில் இருப்பதைப்போல காட்சிப்படுத்தி தான் நினைப்பதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

இந்த பிரச்சார முறை தமிழகத்தில் புதுமையானதாக இருந்தாலும்கூட ரஜினிக்கு அரசியல் கட்சி துவங்குவதில் உள்ள தயக்கத்தை இதன் மூலம் சரி செய்ய முடியும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் எளிய மக்களிடம் ஆழமாக கருத்துக்களைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் நேரில் சென்று பிரச்சாரம் செய்தால் மட்டுமே அவர்கள் நெஞ்சத்தை சென்று அடையும் என்கிறார் பத்திரிக்கையாளர் ஷ்யாம்.

ரஜினி ஒரு கருத்தை தெரிவித்தால் பத்து நிமிடங்களில் தமிழ்நாடு முழுவதும் கடை கோடி வரைக்கும் சென்று சேர்கிறது. அந்த அளவிற்கு பிரபலமானவர். தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்ப வசதியில் அனைவரின் கைகளிலும் மொபைல் போனிலும் நேரில் சென்று பேசவதுபோல ரஜினிகாந்தால் பேச முடியும்.


தமிழ்நாட்டில் 45 சதவீதம் மக்கள் இணையதள செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது கிட்டத்தட்ட 3 கோடி மக்களிடம் உடனடியாக ரஜினியின் கருத்து சென்றடையும். ஊடகங்கள் மூலமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் இந்த பிரச்சாரம் அமைந்தால் நிச்சயமாக தொழில்நுட்ப பிரச்சாரம் வலுவடையும் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading