• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஆலோசனை.. தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி, சுதாகர் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்த கூடாது என முடிவு..

புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஆலோசனை.. தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி, சுதாகர் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்த கூடாது என முடிவு..

Youtube Video

ஜனவரியில் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த், இன்று மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  • Share this:
    ரஜினிகாந்த் தனது கட்சியை 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக போயஸ் கார்டனில் உள்ள வீட்டில், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்திற்குச் சென்ற ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் என முக்கியமான மூன்று பதவிகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து கருத்து கேட்டதாக தெரிகிறது.

    இதனிடையே கட்சி தொடர்பான போஸ்டர்களில் தன் படத்தையோ, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தியின் புகைப்படத்தையோ பயன்படுத்த வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். ரஜினியின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்தினால்போதும் என நிர்வாகிகளுக்கு அவர் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க...வேலூர் அருகே அடுத்தடுத்து மூவர் வெட்டிக் கொலை... 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

     

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு கூடுதலாக 12 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: