முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரஜினி தன் அரசியல் கட்சியின் பெயரை விரைவில் வெளியிடுவார்!

ரஜினி தன் அரசியல் கட்சியின் பெயரை விரைவில் வெளியிடுவார்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை விரைவில் வெளியிடுவார் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையின் போது திரைக்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், 'பேட்ட' படத்தில் ரஜினி தீவிரமாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்க்கால திட்டம் குறித்து அவரின் நண்பரான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் சி.என்.என் - நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ரஜினி தற்போது படத்தில் தீவிரமாக நடித்து வருவதாகவும், இன்னும் ஒரு மாதம் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பார் என்றும் கூறினார். மேலும், நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் ரஜினி தன்னுடைய கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று கூறினார். தமிழகத்தை எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி செய்து சிறந்த தலைவராக ரஜினி உருவெடுப்பார் என்றும் ஏ.சி.சண்முகம் அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் புதிய நீதிக்கட்சி அவருடன் கைக்கோர்த்து தமிழகத்திற்கு நல்லாட்சி அமைய துணையாக நிற்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புதிய கட்சியின் அறிவிப்பு குறித்து ரஜினியே விரைவில் தகவல் அளிப்பார் என்றும், அதேபோல சட்டபேரவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் அவர் உறுதியளித்தார்.

First published:

Tags: A.c.shanmugam, December, Election, New justice party, Political party, Rajinikanth