திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரத்தில் 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.1000 உதவித் தொகையை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனைகளை தமிழகம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள்தான் இருக்கிறது; சென்னையில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றார்.
Also read: எதிரிகளை மிரட்ட வரும் துருவாஸ்த்ரா ஏவுகணை - வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா
பிரதமர் அலுவலகத்தில் உயர்ந்த பொறுப்பை மதுரையில் பிறந்த அமுதா ஐ.ஏ.எஸ் பெற்று மதுரைக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்த்து இருப்பதாகக் கூறிய அவர், சென்னைக்குப் பிறகு மதுரையில் பிளாஸ்மா வங்கியைத் தொடங்குவது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஆய்வு நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கந்தசஷ்டி விவகாரத்தில் ரஜினி தமிழக அரசைப் பாராட்டி உள்ளார் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, RB Udayakumar