வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வசந்த குமார் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
ரஜினிகாந்த்
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்த குமார் காலமானார். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட தொழிலதிபராகவும், மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல்வாதியாகவும் கோலோச்சியவர் வசந்தகுமார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.


 மேலும் வசந்த குமார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வசந்த குமார் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

 அதில், அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading