ரஜினி மக்கள் மன்ற பூத் கமிட்டி குளறுபடி - கசிந்த முக்கிய ஆதாரம்

ரஜினி மக்கள் மன்ற பூத் கமிட்டி குளறுபடி - கசிந்த முக்கிய ஆதாரம்

ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்றத்திலேயே இல்லாத பலரை பூத் கமிட்டியில் சேர்த்தது அம்பலமாகி உள்ளது.

  • Share this:
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவதாக சமீபத்தில் தெரிவித்தார். அதற்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்த போது, பலரது பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவர்களில் பலருக்கு அவர்கள் பூத் கமிட்டியில் இருப்பதே தெரியவில்லை. அவர்களுடைய விருப்பமே இல்லாமல் ரஜினி கட்சியின் பூத் கமிட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொதுமக்களில் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது.அந்த ஆடியோவில் பெயர் கொடுக்காதவர்களும் ரஜினி கட்சியின் பூத் கமிட்டிக்கான பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தங்களது பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் போனில் பேசியவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்திருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி இரண்டு வருடங்களுக்கு முன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: