திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் | ரஜினிகாந்த்

மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பதிவின் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: தி.மு.கவிற்கு துண்டுப் பிரசுரங்கள் மூலமாக பரப்புரை...14-வது வயதில் அரசியலில் நுழைந்த மு.க.ஸ்டாலினின் கதை

அதில், “விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: