Rajinikanth | 2017 மே 13ஆம் தேதி தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, மொத்தத்தையும் சரிசெய்தால்தான் தமிழகம் உருப்படும் என்று ஆவேசகமாகக் கூறினார். அதேஆண்டு இறுதியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறிய ரஜினியிடம் செய்தியாளர் ஒருவர் உங்கள் கொள்கை என்ன என்று கேள்வியெழுப்பினார். இதனை கேட்டதும் ஒரு நிமிடம் தலைசுற்றியதாக கூறினார். அரசியல் பிரவேச அறிவிப்பிக்கு பின் ரஜினிகாந்த் முதன் முறையாக பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை தன்னாலும் கொடுக்க முடியும் என்றார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற சென்றபோது சந்தோஷ் என்பவர் யார் நீங்க என கேட்க 'நான் தாம்பா ரஜினிகாந்த்' என்று கூறினார் ரஜினி. அப்போது நான் தாம்பா ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் டிரண்டானது.
2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர் விடுதலை தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, எந்த எழுவர் என பதில் கேள்வியெழுப்பி விமர்சனத்திற்கு ஆளானார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் தோல்வியை தழுவியது குறித்த கேள்விக்கு, பாஜக கொண்டு வந்த திட்டங்களால் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியதாகக் ரஜினி கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, திருவள்ளுவரை போன்று தன் மீதும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாக சாடினார். அதைத்தொடர்ந்து நவம்பர் 13-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், பாஜகவை பலசாலியான கட்சி என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்த நிலையில், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக பேரணியில் இந்து கடவுள் புகைப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும், அதனை பிரசுரித்ததால், துக்ளக் பத்திரிகைக்கு அப்போதைய கருணாநிதி அரசு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறியது பெரியாரிய இயக்கங்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
2020 ஜனவரி 15 ல்தமிழகத்தில் இருபெரும் ஜாம்பவான்களான திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த வெறும் சினிமா பிரபலம் மட்டும் போதாது. மக்களிடம் எழுச்சி ஏற்பட்டதும் அரசியலுக்கு வருவேன் என்றார். நவம்பர் மாத இறுதியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். டிசம்பர் மூன்றாம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தமிழக மக்களுக்காக தனது உயிரே போனாலும் மகிழ்ச்சிதான் என்று கூறினார்.
மேலும் படிக்க..
.Rajinikanth Fans Reaction | ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தவறினால், இனி நோட்டாவுக்கு வாக்களிபோம்: ரசிகர்கள் ஆவேசம் (வீடியோ)
எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பதே தனது நோக்கம் என்றும் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பேன் என்றும் கூறி வந்த ரஜினி காந்த், அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்ததன் மூலம், 25 ஆண்டுகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.