BREAKING | நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமொழி தேவை... இந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்

BREAKING | நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமொழி தேவை... இந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: September 18, 2019, 6:02 PM IST
  • Share this:
எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி அடையும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

கடந்த 14-ம் தேதி இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டார். அதில், ‘ இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார்

மேலும் இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய தாய்மொழியை அதிகமாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். காந்தி, வல்லபாய் படேல் கண்ட ‘ஒரு நாடு ஒரே மொழி’ கனவை மக்கள் நனவாக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.


அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி அடையும். இந்தியை திணித்தால்  தென்னிந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தி திணிப்பை பல வட இந்திய மாநிலங்களில் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரே மொழியாக இந்தியை ஆக்க முடியாது. பொதுவான மொழியை துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் கொண்டுவர முடியாது” என்று கூறியுள்ளார்.

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், எனது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று தான் ஏற்கெனவே கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். 

Video:

First published: September 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading