ரஜினி பேசும் மொழி பாஜகவின் மொழி...! ஜோதிமணி எம்.பி.பேட்டி

ரஜினிகாந்த்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ரஜினிகாந்த் பேசும் மொழி பாஜக மொழி. அவர் ஒரு கந்து வட்டிகாரர் என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

  கரூரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

  அப்போது பேசிய அவர், ஏப்ரல் மாதம் 1-ம் தேதி நடத்தப்படுவதாக கூறப்படும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியின் கீழ் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை அனுமதிக்கமாட்டேன். அதற்காக உயிரையும் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

  மக்கள் பிரச்சனைக்கு ரஜினிகாந்த் குரல் கொடுப்பதில்லை என தெரிவித்த அவர், பாஜக கொள்கைக்கு மக்களிடம் எதிர்ப்பு வரும் போது மட்டுமே அவர் குரல் கொடுப்பார். அவர் ஒரு பாஜகக்காரர் என்பது அவரை தவிர மற்ற அனைவருக்கும் தெரியும். ரஜினிகாந்த் ஒரு கந்து வட்டிகாரர். ரஜினிகாந்த் பேசும் மொழி பாஜக மொழி என கூறினார்.
  Published by:Sankaravadivoo G
  First published: