ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து... மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து... மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்த் திமுகவிற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்று வரும் பட்சத்தில் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான்.

 • Share this:
  ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், ‘அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் அமைச்சர்கள் திரு.எம்.சி சம்பத் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரால் நடமாடும் டீக்கடை தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அனைத்து சிறப்பம்சங்களுடன் கூடிய பெண்களால் இயக்கப்படும் டீ இது, என தெரிவிக்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து செய்தவர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலை குறித்து ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் முடிவெடுத்திருப்பதன் காரணமாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். மேலும், கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளை படைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலை என்றார்.

  ரஜினிகாந்த் திமுகவிற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்று வரும் பட்சத்தில் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் அவர் அளிப்பார். சிஸ்டம் சரி இல்லை என்று கூரியதால் அவர் அதிமுக அரசை குற்றம் கூறவில்லை.

  பாஜக, கூட்டணியில் ஒரு அங்கம் என்று கூறிய ஜெயக்குமார், வரும் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

  தேய் பிறை போன்ற சரிந்துவரும் கட்சி திமுக ஆகையால் வரும் தேர்தலில் அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை புரியும். தேர்தலை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவ்வப்போது கூட்டங்கள் நடத்துவது வழக்கமான ஒன்று.

  கட்சிகளுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2021-ல் ஒரு மெகா கூட்டணி அமைத்து வெற்றிக் கொடியினை அதிமுக நாட்டும். கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்பு தொகுதி பங்கீட்டு குறித்தான முடிவினை தெரிவிப்போம்.

  லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். இதனை தடுப்பதற்காக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் உள்ளனர் கூடியவர்கள் லஞ்சம் முழுவதும் ஒழிக்கப்படும்.

  முதலமைச்சருடன் நடிகர் விஜய் மறைமுகமாக சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து பேச்சுக்கள் நடைபெற்றிருக்கலாம் இது தவிர்த்து வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
  Published by:Suresh V
  First published: