மக்கள் விசுவாசம் இல்லாமல் ரஜினிகாந்த் ஓட்டைப் பெறமுடியாது: திருநங்கை அப்சரா

கலைஞர், எம்,ஜி,ஆர், ஜெயலலிதா போன்றோரைப் பார்த்து ரஜினி அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருநங்கை அப்சரா கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 1:11 PM IST
மக்கள் விசுவாசம் இல்லாமல் ரஜினிகாந்த் ஓட்டைப் பெறமுடியாது: திருநங்கை அப்சரா
அப்சரா ரெட்டி
Web Desk | news18
Updated: January 10, 2019, 1:11 PM IST
ரஜினி எந்தப் பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் மக்களின் விசுவாசம் இல்லாமல் ஒரு ஓட்டைக் கூட பெற முடியாது என்று மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை அப்சரா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக என்னை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இது திருநங்கைகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். 144 வருட பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியில் இப்படி ஒரு பதவி கொடுத்திருப்பது திருநங்கைகள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.

அப்சரா - திருநங்கை


ராகுல் காந்தி பிரதமரானால் நிச்சயமாக பெண்களுக்காகவும் திருநங்கைகளின் நலன்களுக்காகவும் பாடுபடுவார். காங்கிரசில் பெண்களுக்கு 50% முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு கடந்த  5 ஆண்டுகளில் பெண்களின் நலன்களுக்காக எந்தச் செயலும் செய்யவில்லை” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், ’மோடி அரசில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. கிராமப்புற பெண்களுக்கு எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மேலும் பா.ஜ.க ரஜினிகாந்தை வைத்து கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கிறதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ராகுல் காந்தியுடன் அப்சரா ரெட்டி


ரஜினி எந்தப் பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் மக்களின் விசுவாசம் இல்லாமல் ஒரு ஓட்டைக் கூட பெற முடியாது. கலைஞர், எம்,ஜி,ஆர் ஜெயலலிதா போன்றோரைப் பார்த்து ரஜினி அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்.
Loading...

கஜா புயல், நீட் தேர்வு குறித்து மோடி ஏதும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பிரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்வில் பங்கேறகிறார். மோடி அரசு கொண்டுவந்துள்ள திருநங்கைகளுக்கான மசோதா எங்களுக்கு எதிராகத்தான் உள்ளது. உண்மையாக எங்களுக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கவில்லை’ என திருநங்கை அப்சரா தெரிவித்தார்.

Also Read... ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி!
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...