ரஜினி பாஜகவில் இணைய வேண்டும்..! - பொன். ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆனால் அவர் தனிக்கட்சி என்று கூறும்போது இந்த தருணம் சரியாக இருக்காது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ரஜினி பாஜகவில் இணைய வேண்டும்..! - பொன். ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்
  • Share this:
ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆனால் அவர் தனிக்கட்சி என்று கூறும்போது இந்தத் தருணம் சரியாக இருக்காது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் வாழும் ஒரு இஸ்லாமியர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள். காங்கிரஸ், திமுக கூறும் பொய் பிரச்சாரங்களை இஸ்லாமிய சகோதரர்கள் நம்ப வேண்டாம். மதரீதியான மோதல்களை உருவாக்குவதற்கு திமுக, காங்கிரஸ் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Also read : எதற்காக அரசியலுக்கு வருகிறேன் எனத் தெரியுமா?- நடிகர் ரஜினிகாந்த் தன்னிலை விளக்கம்!


மேலும், 1967ஆம் ஆண்டிற்கு முன்பு பயன்படுத்திய தேர்தல் தந்திரங்களை இப்போதும் பயன்படுத்தி வருகிறார்கள். திமுக பாஜக கூட்டணியாக இருந்தபோது ஆ.ராசா, டி.ஆர் பாலு ஆகியோர் நடுங்கி கொண்டுதான் இருந்தார்களா? யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவிற்கு கிடையாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு துரோகம் செய்வதில் திமுக, காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு கட்சிகள் கிடையாது. திறமை மிக்க பிரசாந்த் கிஷோர் தோல்வியையும் ருசித்துப் பார்க்க வேண்டிய காலம் இது. பிரசாந்த் கிஷோர் ஏறிச் செல்லும் வாகனம் நான்கு டயர் இல்லாதது என தெரிவித்தார்.

Also read : 'அரசியல் மாற்றத்துக்கான எனது முக்கியத் திட்டங்கள் என்ன?’- ரஜினிகாந்த் பட்டியல்!மேலும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய அவர், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்; ஆனால் அவர் தனிக்கட்சி என்று கூறும்போது இந்த தருணம் சரியாக இருக்காது.

1996-இல் ரஜினிகாந்த் செய்த தவறு திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தது. தான் ஆதரவு கொடுத்து, முதலமைச்சராக ஒருவர் வருவதை நிரூபித்து காட்டியவர் ரஜினிகாந்த் என கூறினார்.
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading