என்னை மேலும்.. மேலும்.. வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி உருக்கம்

என்னை மேலும்.. மேலும்.. வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி உருக்கம்

ரஜினிகாந்த்

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 • Share this:
  என்னை அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று கூறி உருக்கமான அறிக்கை ஒன்றை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார்.

  அந்த அறிக்கையில், ‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப்பெருமக்களுக்கு...

  நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடதிதி இருக்கிறார்கள்.

  கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடதியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

  தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

  நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.

  தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொகிறேன்.

  வாழ்க தமிழ் மக்கள்!   வளர்க தமிழ்நாடு!!   ஜெய்ஹிந்த்!!!’ என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: