கட்சி மாநாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - ரஜினி

news18
Updated: May 10, 2018, 2:00 PM IST
கட்சி மாநாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - ரஜினி
மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த்
news18
Updated: May 10, 2018, 2:00 PM IST
ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள தனது வீட்டில் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 

ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள தனது வீட்டில்ஆலோசனை நடத்தி வருகிறார். ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் காலை நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் இல்லத்தில் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம், மாநில நிர்வாகி சுதாகர் உட்பட 6 ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 32 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் உறுப்பினர் சேர்க்கையில் இளைஞர்களை அதிக அளவில் மன்றத்தில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றியச் செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாநாடு குறித்து விரைவில் ரஜினி அறிவிப்பார் என ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆலோசனை நடத்தும் புகைப்படங்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு என பகிர்ந்துள்ளார்.
Loading...
First published: May 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்