• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ”பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி.. அவரை யாரும் தவறாக புரிந்துகொண்டு பேச வேண்டாம்” - லாரன்ஸ்

”பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி.. அவரை யாரும் தவறாக புரிந்துகொண்டு பேச வேண்டாம்” - லாரன்ஸ்

ரஜினி , லாரன்ஸ்

ரஜினி , லாரன்ஸ்

ரஜினிகாந்தை பொறுத்தவரை யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் என்றும், அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாமெனவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரஜினிகாந்தை பொறுத்தவரை யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல எனவும் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு திருப்பி திட்டாத பண்பாளர் என கூறியுள்ளார்.

    இயக்குநர் வேலு பிரபாகரன் பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட ரஜினிகாந்த் உதவி செய்தார் என்றும் லாரன்ஸ் நினைவு கூர்ந்துள்ளார்.


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: