ரஜினி வீட்டுவாசலில் அமமுக காத்திருக்கவில்லை - தமிழருவி மணியனுக்கு வெற்றிவேல் பதில்

ரஜினி வீட்டுவாசலில் அமமுக காத்திருக்கவில்லை - தமிழருவி மணியனுக்கு வெற்றிவேல் பதில்
  • News18
  • Last Updated: February 14, 2020, 6:05 PM IST
  • Share this:
டிடிவி தினகரனுடன் கூட்டுச் சேர்ந்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினிகாந்த் கருதுவதாக தமிழருவி மணியன் அளித்த பேட்டிக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வெற்றிவேல் பதில் அளித்துள்ளார்.

இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த தமிழருவி மணியன், அமமுக உடன் கூட்டணி அமைக்க, ரஜினி விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கேள்விகளுக்கு அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் நியூஸ் 18-க்கு பேட்டியளிக்கையில், “ரஜினியின் அரசியல் குறித்து பேச தமிழருவி மணியனுக்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது. ரஜினியின் செய்தி தொடர்பாளரா இவர்?


தான் அமைத்த கூட்டணி தான் அமோக வெற்றி பெறுகிறது என்று மொட்டையாக எதையும் பேசக் கூடாது. ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் தான் பேச வேண்டும்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரா? அல்லது காந்திக்கு இவர் பேரனா? தமிழருவி மணியன் நல்லவராக இருக்கலாம், அதற்காக அவர் எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லக்கூடாது.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று இவர் எப்படி சொல்லலாம்? ரஜினியுடன் கூட்டணி வைப்பதற்காக அவர் வீட்டு வாசலில் நாங்கள் காத்திருக்கவில்லை. அது குறித்து ரஜினி முடிவு செய்ய வேண்டும். அல்லது அமமுக தலைமை முடிவு செய்யவேண்டும். இடைத்தரகர் தமிழருவிமணியன் பேசக்கூடாது.


ரஜினியின் செய்தி தொடர்பாளராக இவர் அறிவிக்கப்பட்டால் தமிழருவி மணியன் சொல்வது ரஜினியின் குரலாக ஒலிக்க முடியும். ரஜினியோடு சேர்வதற்கு பாமக முன் வருமென்று தமிழருவி மணியன் எப்படி சொல்ல முடியும்?

இப்போது பாமக அதிமுக கூட்டணியில் இருக்கிறது. எனவே இது குறித்து ரஜினி பேச வேண்டும் அல்லது மருத்துவர் ராமதாஸ் பேச வேண்டும். மணியன் எப்படி சொல்ல முடியும்? தமிழருவி மணியன் அதிகப் பிரசங்கித்தனமாக எதையும் பண்ண கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்” என்று தெரிவித்தார்.

First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading