ரஜினியால என் பொழப்பே போச்சு... ரஜினி புகைப்படம் விற்பவர் புலம்பல்...!

ரஜினியால என் பொழப்பே போச்சு... ரஜினி புகைப்படம் விற்பவர் புலம்பல்...!
சந்திரசேகர்
  • News18
  • Last Updated: March 12, 2020, 2:38 PM IST
  • Share this:
ரஜினியால என் பொழப்பே போச்சு என்று ரஜினி புகைப்படம் விற்பவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அந்த கூட்டத்தில் ஒரு விசயம் தனக்கு ஏமாற்றமாக இருந்தது என குறிப்பிட்டார். இதுதொடர்பாக பல செய்திகள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தகவல் வெளியானது.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 25 ஆண்டுகளாக, நான் அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறேன் என்று கூறி வருகின்றனர். ஆனால் 2017-ல்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தேன் என்று விளக்கம் அளித்தார்.


ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியலில் நிலையற்றத் தன்மை ஏற்பட்ட போது, அதனைக் கருத்தில் கொண்டே அந்த முடிவை எடுத்ததாகவும் ரஜினி கூறினார். ஆனால் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஆட்சிக்கு வருவது வீண் என்றும் ரஜினிகாந்த் ஆதங்கம் தெரிவித்தார்.

Also see... PHOTOS: ’அண்ணாத்த’ படத்திற்காக உடல் எடையை குறைத்த நடிகை மீனா...!

இறுதியாக செய்தியாளர் சந்திப்பிலும் தான் எப்போது கட்சி தொடங்குவேன் என்று ரஜினி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ரஜினியால என் பொழப்பே போச்சு என்று ரஜினி புகைப்படம் விற்பவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.நமது செய்தியாளர்களிடம் பேசிய புகைப்படங்கள் விற்பனை செய்யும் சந்திரசேகர் என்ற முதியவர், என் ஊரு திருவண்ணாமலை. கடந்த இருபது வருஷமா ரஜினியோட புகைப்படம், ஸ்டிக்கர் எல்லாத்தையும் ஊர் ஊராப் போயி வித்துக்கிட்டு இருக்கேன்.

பல வருஷமா கட்சி தொடங்குவார், இன்னும் வியாபாரம் நல்லா நடக்கும் அப்படின்னு ஒரு நம்பிக்கையோட எல்லா இடத்துக்கும் போய் கிட்டே இருந்தேன். இன்னிக்காவது தெளிவா ஒரு முடிவு சொல்லிடுவாரு. இனிமே படம், ஸ்டிக்கர், கொடி எல்லாம் வியாபாரம் களைகட்டும் அப்படின்னு நினைச்சு தான் வந்தேன்.

ஆனா எல்லாரும் நினைச்ச மாதிரி நல்ல சேதி சொல்லாம போயிட்டாரு. ரொம்ப வருத்தமா இருக்கிறது என்று முதியவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading