ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களின் கோரிக்கை...

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களின் கோரிக்கை...

ரஜினிகாந்த்

ரஜினி சில நாட்களுக்கு நிம்மதியாக ஓய்வு எடுத்தால்தான் அவருடைய உடல்நிலை சீரடையும்

 • Share this:
  ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களால் கோரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஜினியின் அனுமதி இன்றி நடத்தப்படும் போராட்டங்களில் மக்கள் மன்ற காவலர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

  ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி, ஜனவரி 10ஆம் தேதி ரஜினி ரசிகர்கள் ஒருசாரார் போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் அதில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரஜினி சில நாட்களுக்கு நிம்மதியாக ஓய்வு எடுத்தால்தான் அவருடைய உடல்நிலை சீரடையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      

  மேலும், ரஜினியின் அனுமதி இன்றி நடத்தப்படும் எவ்வித போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் மன்ற காவலர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்ளப்படுவதா குறிப்பிடப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: