ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?
ரஜினிகாந்த்
  • Share this:
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்த ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு அதற்கான நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டாக அரசியல் கட்சி தொடங்காமல், நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்து வந்தார். அதேசமயம்,  ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்கப் போகிறார் என்ற கேள்வி  தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது.


ஆனால் தேர்தல் வரும் நேரத்தில் புதிய கட்சி தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் பதிலளித்து வந்தார். இந்நிலையில் வரும் 5-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகத்தின் அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட செயலாளர்களுக்கு இது குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள். நடிகர் ரஜினிகாந்த், இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி, அதற்கான ஏற்பாடுகளையும், ஒவ்வொரு மாவட்டத்தின் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்கான திட்டமிடல், கட்சி அறிவிக்கப்படும் தேதி, அதற்கான மாநாடு எங்கே அறிவிக்க வேண்டும், உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க: கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடியுங்கள் - தமிழக டாக்டர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading