கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை காத்திருக்கவும் - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை காத்திருக்கவும் - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த்

கட்சியின் பெயர் குறித்து தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் மக்கள் மன்றத்தினர் காத்திருக்கவேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Share this:
  ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்ற ரசிகர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த நிலையில், ஜனவரி மாதம் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்று டிசம்பர் 3-ம் தேதி ரஜினிகாந்த் அறிவித்தார். அதனையடுத்து, அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ரஜினியின் கட்சி பெயர் தேர்தல் ஆணையத்தில் விரைவில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பெயரில் மக்கள் சேவை கட்சி எனும் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  ரஜினி பெயரில் கட்சி தொடங்க விண்ணப்பித்தவர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. பாபா முத்திரையை சின்னமாக ஒதுக்க விண்ணப்பதாரர் கேட்டிருந்ததாகவும், ஆனால், தேர்தல் ஆணையம் அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகின்றது. அதனையடுத்து, மக்கள் சேவை கட்சி என்ற ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் ஆட்டோவில் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கின. இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அந்த அறிக்கையில், ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: