புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்! ரஜினிகாந்த் அதிரடி

சிலர் சொன்னார்கள் ரஜினி சொன்னால் மோடி கேட்டிருப்பார். ஆனால், சூர்யா பேசியது அவர்களுக்கு கேட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்! ரஜினிகாந்த் அதிரடி
ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: July 21, 2019, 11:31 PM IST
  • Share this:
புதிய கல்விக் கொள்கை தொர்பாக சூர்யா பேசியதை நான் ஆமோதிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘வைரமுத்துவின் தமிழாற்றுபடை புத்தகத்தை படித்தபோது அவர் மீதிருந்த மரியாதை மேலும் அதிகமானது. பொன்னியன்செல்வன் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார் இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன்.


தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டு இருக்கிறது. நானும் கே.வி.ஆனந்த்துடன் இணைந்து படம் செய்திருக்கவேண்டியது. அதை நான்தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர்.

ஒருமுறை, நான் கங்கையில் குளிக்கும் போது என் ருத்திராட்சம் தொலைந்துபோனதற்கு கவலையாக இருந்தேன். அப்போது அங்கு ஒரு அகோரி வந்தார். அவரிடம் என் கையில் இருந்த பணத்தைக் கொடுத்தேன். அகோரி என்னிடம் கேட்டார், உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் எனக்கேட்டார். பின் ருத்ராட்சம் வேண்டுமா எனக்கேட்டார்.

பின் ஓரிரு நாட்களில் என்னை ஒரு பெண் சந்தித்து ருத்ராட்சம் இருப்பதாக அதை என்னிடம் கொடுக்க வந்ததாக தெரிவித்தார். இது தான் அகோரிகளின் சக்தி. இந்த விஷயம் இதற்கு சம்மந்தம் இல்லை என்றாலும் சொல்லவேண்டி உள்ளது. சிலர் சொன்னார்கள் ரஜினி சொன்னால் மோடி கேட்டிருப்பார். ஆனால், சூர்யா பேசியது அவர்களுக்கு கேட்டுள்ளது.சூர்யாவின் இன்னொரு முகம் சில நாள்களுக்கு முன்னர் தெரியவந்தது. புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் கஷ்டங்களை கண் எதிரே பார்த்தவர் சூர்யா’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading