அன்பழகன் பொது வாழ்வில் சம்பாதித்தது இரண்டே இரண்டுதான்...! ரஜினிகாந்த் இரங்கல்

அன்பழகன் பொது வாழ்வில் சம்பாதித்தது இரண்டே இரண்டுதான்...! ரஜினிகாந்த் இரங்கல்
  • News18
  • Last Updated: March 7, 2020, 10:45 AM IST
  • Share this:
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அதிகாலை வயது முதிர்வால் காலமான நிலையில், ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் காலமானார்.


அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, திமுக நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பால கிருஷ்ணன், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

”பேராசிரியர் அன்பழகன் பொது வாழ்வில் சம்பாதித்தது இரண்டே இரண்டுதான். அது மதிப்பு மற்றும் மரியாதை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading