ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - ரஜினி ட்வீட்

விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - ரஜினி ட்வீட்

விஜயகாந்த் - ரஜினிகாந்த்

விஜயகாந்த் - ரஜினிகாந்த்

Vijayakanth : தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேமுதிக தலைவர் விஜயகநாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டுள்ளது. அவர் ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தேமுதிக அறிவித்துள்ளது.

இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் (சர்க்கரை நோய்) தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது.

மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரு நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம்... விரைந்து பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இந்நிலையில், விஜயகாந்த் நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவேண்டும் என அரசியல் பிரபலங்களும் நடிகர்களும், தேமுதிக தொண்டர்களும் வேண்டி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

First published:

Tags: DMDK, Rajinikanth, Vijayakanth