• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இனிப்பு & வெங்காயம் வழங்கி ரஜினி பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்...!

இனிப்பு & வெங்காயம் வழங்கி ரஜினி பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்...!

  • News18
  • Last Updated :
  • Share this:
    புதுக்கோட்டையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்கி ரஜினி ரசிகர் மன்றத்தினர் கொண்டாடினர்.

    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரும் 12-ம் தேதி என்ற நிலையில், அவரது ரசிகர்கள் இப்போதிலிருந்தே கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மகளிர் அணி சார்பில் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தின் முன்னால் கூடிய ரசிகர்கள் இனிப்புகளுடன் வெங்காயத்தை தாம்பூலத்தில் வைத்து ஊர்வலமாக சென்று ரஜினி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் உடன் வெங்காயத்தையும் சேர்த்து வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினர்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: