கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி அமைச்சரிடம் மனு அளித்தப் பெற்றோர்!

படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டுள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி அமைச்சரிடம் மனு அளித்தப் பெற்றோர்!
எஸ்.பி.வேலுமணி
  • News18
  • Last Updated: November 18, 2019, 10:28 PM IST
  • Share this:
கோவையில் லாரி மோதி விபத்துள்ளான ராஜேஸ்வரிக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரி அவரது பெற்றோர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் கடந்த 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிங்காநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அனுராதா லாரி மோதி விபத்துக்குள்ளானார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டுள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, ராஜேஸ்வரியின் பெற்றோர் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்து ராஜேஸ்வரிக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.


Also see:Loading...

 
First published: November 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...