“தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி ராஜா, ஸ்டாலின் கூஜா” - ராஜேந்திர பாலாஜி

தேர்தலன்று ஸ்டாலின் வேஷம் கலைந்து விடும். தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி ராஜாவாக இருப்பார், ஸ்டாலின் கூஜாவாக இருப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பிரசாரத்தின் போது பேசினார்.

Web Desk | news18
Updated: April 16, 2019, 8:03 AM IST
“தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி ராஜா, ஸ்டாலின் கூஜா” - ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Web Desk | news18
Updated: April 16, 2019, 8:03 AM IST
ஸ்டாலின் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்த பேசினார்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு கேட்டும் சாத்தூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் ஆதரிக்க கோரியும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக , காங்கிரஸ் தான் என்றும் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான் என்றும், ஸ்டாலின் இதில் நாடகம் போடுகிறார் என்றும் கூறினார். அதிமுக அரசுக்கும், முதல்வருக்கும்தான் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அருகதை இருக்கிறது.

ஸ்டாலின் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு,ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு. தேர்தலன்று ஸ்டாலின் வேஷம் கலைந்து விடும். தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி ராஜாவாக இருப்பார், ஸ்டாலின் கூஜாவாக இருப்பார்.

தேர்தல் கமிஷனுக்கும் அதிமுக ஆட்சிக்கும்,மோடி ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான அமைப்பு என்றும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது மொத்தத்தில் தினகரன் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும் கடைசியில் தினகரன் பணநாயகம் வென்றது என்று கூறிவிட்டு செல்வார் என்று அவர் கூறினார்.

இறுதியில் ஒருவர் டெபாசிட் இழப்பார் ஒருவர் டெபாசிட் வாங்குவார். ஆனால் வெற்றி பெறுவது அதிமுக கூட்டணி தான் என்றும் சசிகலாவை தினகரன் வெளியில் எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் மாலை மரியாதைக்காகத்தான் தினகரன் நாடகம் போடுகிறார் என்றும் விமர்சனம் செய்தார்.

முதல்வர் துணை முதல்வர் பிரச்சாரத்தில் இருப்பதால் சென்னை சென்றவுடன் 4 தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றும், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் 22 சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும்.

மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லையென்றும், இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Also Watch:  பொன். ராதாகிருஷ்ணன் கூறும் பிச்சைக்காரன் கதைய கேளுங்க!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...