Home /News /tamil-nadu /

ஆவினில் ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திர பாலாஜிதான் காரணம்: அமைச்சர் நாசர்

ஆவினில் ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திர பாலாஜிதான் காரணம்: அமைச்சர் நாசர்

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளது. விசாரணையில் ராஜேந்திரபாலாஜி 3 கோடி வாங்கியது தெரியவந்துள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    ஆவினில் நடைபெற்ற ஒட்டு மொத்த ஊழலுக்கு காரணம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் என்றும்  விரைவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும்  பால்வளத்துறை அமைச்சர் நாசர்  தெரிவித்துள்ளார்.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று தேனியில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
    ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையிலே தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம்.

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 83 கோடி சிக்கியுள்ளது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் அமைச்சர்கள் 10பேர் பெயர் உள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் உண்டு.

    மேலும் படிங்க: இடுகாட்டிற்கு பாதை இல்லாமல் 70 ஆண்டுகளாக கஷ்டப்படும் கிராம மக்கள்


    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளது. விசாரணையில் ராஜேந்திரபாலாஜி 3 கோடி வாங்கியது தெரியவந்துள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் நடைபெற்ற ஒட்டு மொத்த ஊழலுக்கு காரணம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான். விரைவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியை நெருங்கியது போலீஸ்.. ரகசியமாக உதவிய இருவர் கைது


    ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். அவரது தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Aavin, Rajendra balaji

    அடுத்த செய்தி