Home /News /tamil-nadu /

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக  எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி ஆனதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தற்பொழுது மேலும் 3 தனிப்படை அமைத்து மொத்தம் 6 தனிப்படை மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  ராஜேந்திரபாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள் , விசாரணை செய்யுங்கள் ஆனால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாமென்று என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி சகோதரி லட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Rajendra balaji

    அடுத்த செய்தி